கார் விபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்..!!

Loading… ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 46 வயதில் கார் விபத்தில் இறந்துள்ளார். சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லிக்கு வெளியே 50 கிமீ தொலைவில் விபத்து ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. Loading… இரவு 10.30 மணியளவில் ஹெர்வி ரேஞ்ச் சாலையில் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் சாலையை விட்டு உருண்டு கவிழ்ந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். Loading…